ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு என்றுவினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்துஓய்வு முடிவை திரும்ப பெற்றார்.
கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் (50 கிலோ பிரிவு) இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பங்கேற்றார். இதில் ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய இவர் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
பைனல் நடப்பதற்கு முன் வினேஷ் போகத்தின் எடை பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இவர் மல்யுத்தபோட்டியில் இருந்துஓய்வை அறிவித்தார்.இந்நிலையில் நேற்று வினேஷ் போகத் ஓய்வு முடிவு திரும்ப பெற்று மீண்டும் போட்டியில் பங்கேற்க போவதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு என்றும் தெரிவித்தார்.
'மல்யுத்தபோட்டியைஇன்னும்நேசித்துக் கொண்டுஇருப்பதைஉணர்ந்தேன்.மீண்டும்விளையாடவிரும்புகிறேன்’ என்று சமூகவலைதளத்தில் அறிக்கைவெளியிட்டார்.லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்,'என்று தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply